Wednesday, December 31, 2008

நினைவுகள்

நமது நினைவுகள் நிகழ்வுகளின் முன்னோடி.ஆகையால் அப்படிப்பட்ட நினைவுகளை நம் நமது தாய் மொழியில் நினைத்து பார்ப்பதின் சுகம் நான் அரிந்தது மிதவும் தாமதமாகதான் . சிறு வயதில் புரியாத ஊரில் புரியாத மொழியான ஆங்கிலம் கற்க அனுப்பி வைத்தார்கள் பெற்றோர்கள் . அன்றில் இருந்து இன்று வரை எதோ உலகத்தில் பெரிதாக சாதித்து விட்டதாக நினைத்து மனதில் நினைப்பதை கூட அங்கிலதில்லேயே நினைப்பதும் பேசுவதுமாக இருந்தேன்.

மனதில் தாய்மொழியில் கற்பனை காண்பதின் சுகத்தை கூடே இளந்து விட்டேன். நாம் நாமாக இருப்பது இயலாத காரியமா. என்னுடைய நண்பன் அடிக்கடி சொல்வான் நாம் ஒரு அளவாவது சமூகத்துக்காக வாழ வேண்டும் . ஒப்பு கொள்கிறேன் , அது ஓரளவு உண்மைதான் . சமூகத்துக்காக அல்லாவிட்டாலும் நாம் பேருக்காக கொஞ்சமாவது வாழ்கிறோம் .
கணவன் மனைவி பாசம் கூட கலப்படம் அற்டது என்று சொல்ல இயலாத காலம் . வலைகூடாவில் பனி புரியும் நிறைய அன்பர்களின் அனுபவங்கள் நமக்கு பாடமாக எடுக்கலாம். உண்டியல் போன் வங்கி மணிகணக்கா காதல் ரசம் பொழியும் தம்பதிகள் , தனக்கு வாங்கிய தங்க அபரனக்ளை தன் மாமியார் எடுத்து விட்ட காரணத்தால் நாள் கனக்கக் பேசாமல் இருந்தது உண்டு.

எங்கோ வாசித்த ஒரு நாபகம் " முனிவர் முற்றும் துறந்து அல்ல தவம் இருக்கிறார், அவருக்கும் சுயநலம்தான், அது சொர்க்கம் கிடைக்க வேண்டும் மோட்சம் கிடைக்க வேண்டும் என்றல்லாம்".

No comments:

Post a Comment